Breaking News

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - மகிந்த

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையே வெளிக்காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.முன்பிருந்தே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையே தாம் கூறி வருவதாகவும், எனினும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை என்றும் மகிந்த தெரிவித்துள்ளார். 

மேலும் வடக்கில் காவற்துறை நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், இராணுவ முகாம்களை தொடர்ந்தும் பேண வேண்டும் என்றும், புலனாய்வு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்