மத்திய அரசாங்கத்தை தமிழக அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் - ஜி.கே
ஈழத் தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசாங்கத்தை தமிழக அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் மாணவர்களை காவற்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் ஏனைய மக்கள் அனுபவிக்கின்ற பாதுகாப்பான சூழ்நிலை, ஈழத் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.இதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.








