Breaking News

ரயில் தடம்புரள்வு : 53 பேர் பலி, 600 இற்கும் மேற்பட்டோர் காயம்



கெமருன் நாட்டில் ரயில் தடம்புரண்டதில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 600 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்க ப்படுகின்றது.

கெமருன் நாட்டின் பெரிய நகரங்கள் இரண்டுக்கிடையில் பயணிக்கும் ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. விபத்து இடம்பெறும் போது ரயிலில் சுமார் 1300 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், அந்த ரயிலி்ல் பயணிக்க முடியுமான பயணிகளின் எண்ணிக்கை 600 எனவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து இடம்பெறுவதற்கும், உயிரிழப்பு அதிகரிப்பதற்கும் பயணிகள் அதிகரித்தமையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.