Breaking News

கிம் காடஸ்சியன் ஆயுத முனையில் தடுத்துவைப்பு



பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சில் உள்ள நட்சத்திர விடுதி அறையொன்றில் பிரபல மொடல் அழகியும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளருமான கிம் காடஸ்சியன் ஆயுத முனையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றிருந்த அவரின் கணவர், இந்த சம்பவம் குறித்து அறிந்த பின்னர் அந்த விழாவை இரத்துச் செய்துவிட்டு பாரிஸ் பயணமாகியுள்ளார்.

முகமூடியுடன் பொலிஸ் அதிகாரிகள் போல் உடையணித்த இருவர் கிம் காடஸ்சியனை தடுத்துவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் கிம் காடஸ்சியன் அதிர்ச்சி அடைந்துள்ள போதிலும் அவருக்கு உடல் ரீதியில் எந்தவொரு பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவொன்றிலேயே கிம் காடஸ்சியன் சிக்கியுள்ளதாகவும் அவருக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் பாரிஸ்சின் பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பாரிஸ்சில் நடைபெறும் நவநாகரிக வார நிகழ்வில் 35 வயதான கிம் காடஸ்சியனுடன், அவரின் தாயாரும் சகோதரியும் பங்கேற்றுள்ளனர்.