Breaking News

சுமூக நிலைக்கு திரும்பியது வடக்கு!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பை தொடர்ந்து வடமாகாணத்தில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது தணிந்து சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த 20ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இதன் காரணமாக அண்மைய நாட்களில் வடமாகாணத்தில் பதற்ற நிலை நிலவி வந்தது.

யாழ். சம்பவத்தையடுத்து சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சுன்னாகம் சம்பவத்திற்கு ஆவா எனப்படும் குழு உரிமை கோரி துண்டுப்பிரசுரமும் வெளியிட்டிருந்தது.

இவ்வாறாக வடக்கில் தொடர்ந்த பதற்றம் தற்போது தணிக்கப்பட்டு சுமூக நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கவும், சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா எனப்படும் குழுவினரை கண்டுபிடிக்கும் நோக்கிலும் மூன்று குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.