Breaking News

போக்குவரத்து அபராத தொகை திருத்தம் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

போக்குவரத்து அபராத தொகை திருத்தம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே தெரிவித்துள்ளார்.

நேற்று (24) ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற பலய அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்கவும் கலந்து கொண்டு, மத்திய வங்கி முறி விநியோகம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.மேலும் இந்த விவாத நிகழ்ச்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்கவுடன், மாகாணசபை உறுப்பினர் பிரபாத் அல்விஸ்சும் கலந்து கொண்டனர்.