Breaking News

சுமந்திரனுக்கு இலக்கு வைக்கப்பட்ட தற்கொலை அங்கி! சயந்தன் சாட்சி!(காணொளி)

மறவன் புலவில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட
தற்கொலை அங்கி தமிழரசு கட்சியின் பேச்சாளர் சுமந்திரனுக்கு இலக்கு வைக்கப்பட்டு இருந்தது என்று வடமாகாண சபை உறுப்பினர் சயந்தன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்..

தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் திறப்பு விழா நிகழ்வில் நன்றியுரை ஆற்ற அழைக்கப்பட்ட சயந்தன் நன்றி கூறுவதைத் தவிர்த்து தனது மற்றும் சுமந்திரனின் அரசியல் எதிரிகளை வசைபாடுவதில் நீண்ட நேரம் செலவளித்தார்.

உரையின் இறுதியில் அந்தத் தற்கொலை அங்கியை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச்சென்ற முக்கிய சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட சயந்தன், அந்தச் சூத்திரதாரி தனது அலுவலகத்துக்கு முன்னால் வீடு வாடகைக்கு எடுத்து வெளிநாட்டுப் பெண்ணை அமர்த்தி சுமந்திரனின் நடமாட்டத்தை வேவுபார்த்தாகக் குறிப்பிட்டார். இப் புனை கதைக்கு கூட்டத்தில் எதிர்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தனதுரையை முடித்துக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டமாவை முதலமைச்சர்மீதும் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்மீதும் நேற்றைய கோபத்தை தீர்த்துகட்டியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்