Breaking News

நல்லூரில் மாவீரர் நாள் அஞ்சலி ; புலனாய்வாளர்களின் நடமாட்டம்

யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.


சிவில் உடை தரித்த நிலையில் புலனாய்வாளர்கள் நடமாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க மாவீரர்களை நினைவுகூறும் வகையில் இன்று காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, போரின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.