வவுனியாவில் மாவீரர் நாளை எதிர்க்கும் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் (விபரம் உள்ளே)
வவுனியா மாவட்டத்தில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிகழ்வுக்காக மண்டபங்களை வழங்குவதற்கு பலரும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
வவுனியா நகரசபை மண்டபத்தை வழங்குவதற்கு நகரசபை செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ள அதேவேளை, சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபம், முத்தையா மண்டபம், சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபம் என்பவற்றை ஏற்பாட்டுக் குழு அணுகிய போதும் அவர்கள் வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதில் சில மண்டபங்களுக்கு பொறுப்பானவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடவுள்ளவர்கள்.
இவர்கள் மண்டபத்தை வழங்க முன்வராதது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தியான கருத்துக்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது