Breaking News

இலங்கை குறித்து ஐ.நா.வில் மற்றுமொரு பிரேரணையை முன்வைக்க ஆயத்தம்!

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கால தாமதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கி மற்றுமொரு பிரேரணையை முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருகின்றது.


அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று நான்கு தினங்களுக்குள்ளேயே ட்ரம்பின் பிரதிநிதியாக, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் செயலாளர் அன்ஜூலா கடந்த வாரம் இலங்கை வந்திருந்தார். இதன்போதே மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் ஆட்சியில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றபோதும் அதனை மறுத்துள்ள அமெரிக்க பிரதிநிதி, இலங்கையில் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் பலவுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளதோடு இலங்கை குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.