சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோத்தா - THAMILKINGDOM சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோத்தா - THAMILKINGDOM
 • Latest News

  சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோத்தா

  சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டு கற்கைநெறி ஒன்றை பயில்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


  மூன்றாண்டு அரசியல் கற்கைநெறியை பயில்வதற்கு, முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட நடத்தும், பாத் பைன்டர் என்ற அரசசார்பற்ற நிறுவனம் மூலமாக,  கோத்தாபய ராஜபக்சவுக்கு, சீன அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

  சிறிலங்காவில் அரசியல் முகாமைத்துவம் தொடர்பாக, பாத் பைன்டர் நிறுவனம், சீனாவின் தற்கால அனைத்துலக உறவுகளுக்கான நிறுவகத்துடன் உடன்பாடு ஒன்றை செய்துள்ளது.

  இந்த நிலையிலேயே, மிலிந்த மொறகொடவும், ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவரும், சீனாவில் அரசியல் கற்கைநெறி ஒன்றை கற்குமாறு கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோத்தா Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top