தமிழ் மக்கள் பேரவையின் அவசர அறிவித்தல்
நாளை (15) திருகோணமலையின் உட்துறைமுகவீதியில் அமைந்துள்ள ஜெசுவிட் நிறுவன மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையினரால் ”எழுகதமிழ் - மட்டக்களப்பு” நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 9.30 மணிக்கு இக் கலந்துரையாடல் ஆரம்பமாகும் என சட்டத்தரணி விஜயகுமார் தெரிவித்தார்.
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் தமிழ் மக்கள் பேரவையினர்.