Breaking News

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த திரைமறையில் சதி! – கிழக்கு முதல்வர்



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிளவுபடுத்த மறைமுகமாக உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டு சக்திகளும் ஊடுருவி இருப்பதைப் போன்று சிறுபான்மை மக்களின் பலமாக காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அவ்வாறு பிளவுபடுத்த அல்லது சீண்டிப்பார்ப்பதற்கு சதிகள் நடக்கின்றதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – தும்பங்கேணியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளதென குறிப்பிட்ட கிழக்கு முதல்வர், ஆகக்குறைந்தது தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு ஒரு தொனியில் ஒலிக்கும்போது இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு பலமுள்ள சக்தியாக மாறுவதோடு, சமாதானமான நிரந்தரமான ஒரு தீர்வை ஏற்படுத்தும் குரலாகவும் அது அமையுமென மேலும் தெரிவித்தார்.