Breaking News

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தி அரசிற்கு அழுத்தம் கொடுங்கள்

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யுத்தம் நிறைவுற்று 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் தமது சொந்த குடியிருப்பிற்கு செல்ல முயடிாத நிலையை நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மக்கள் தமது சொந்த காணிகளுக்கு செல்வதற்கான போராட்ட வெற்றிக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் கடந்த 31 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் இன்று 13 ஆவது நாளை எட்டியுள்ளது.

எனினும் மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்வு எட்டப்படாத நிலையில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஆதரவு வலுப்பெற்று வருகின்றது.