மக்கள் போராட்டத்தின் எதிரொலி: ராணுவ முகாமின் பாதுகாப்பு அதிகரிப்பு
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் புதுக்குடியிருப்பு மக்கள் கடந்த 6 தினங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ முகாமின் முன்வாசலில் முட்கம்பிகள் பொருத்தப்பட்டு, பிரதான இரு வழிப்பாதைகளிலும் அதிகமான ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு போராட்டங்களுக்கான ஆதரவு வலுப்பெற்று வரும் நிலையிலேயே ராணுவ முகாமின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








