Breaking News

தீர்வின்றி தொடரும் பிலவுக்குடியிருப்பு போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பதினோராவது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது.


கடந்த 31 ஆம் திகதி மக்கள் தொடர்போராட்டத்தை ஆரம்பித்து விமானப்படை முகாமிற்கு முன்பாக கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போரட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் கூட இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை நேற்றைய தினம் காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கம் அழைப்பு விடுத்தபோதும் அந்த அழைப்பை மக்கள் நிராகரித்திருந்தனர்.

பிலவுக்குடியிருப்பு பகுதியில் 84 குடும்பங்களிற்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.