Breaking News

“திரும்பி வாருங்கள்“ – அவுஸ்ரேலிய முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு ரணில் அழைப்பு

அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கன்பராவில், அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போதே, அவுஸ்ரேலியப் பிரதமருக்கு அருகே நின்று, சிறிலங்கா பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

“அவுஸ்ரேலியாவுக்குத் தப்பிச் செல்லவதற்காக இலங்கையர்கள் சட்டத்தை மீறியுள்ளனர். ஆனால், நாடு திரும்பினால், சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ளமாட்டார்கள்.

திரும்பி வாருங்கள், எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டது” என்று சிறிலங்கா பிரதமர் அழைப்புவிடுத்துள்ளார்.