பாம்புக்கு பால்வார்க்கும் கம்பன் கழகம் (படங்கள்)
12நாட்களாக மக்கள் கேப்பாபுலவு நிலமீட்புக்காக போராடிவருகின்ற நிலையில் அந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை கொழும்பு கம்பன் விழா 2017 இற்கு அழைத்து கௌரவித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வழமை போலவே வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எதிராக பல கட்டுரைகளை தொடராக எழுதிவரும் “(க)வம்பு வாரதி“ என அழைக்கப்படும் ஜெயராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கம்பன் விழா 2017 இல் வழமைபோலவே சிங்கள தலைவர்களுக்கு தமது நன்றிக்கடனை செலுத்தும் முகமாக அவர்களை அழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜெனாதிபதி மைத்திரிபால ஆகியோரை அழைத்து கௌரவித்த கம்பன் கழகத்தினர் இம்முறை ஒருபடி மேலே சென்று யார் எமது மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்களோ அவர்களின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரை அழைத்து அழகுபார்த்திருக்கிறார்கள்.
இந்த வம்பு வாரதியின் முன்னைய பதிவுகளை காண
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்