Breaking News

காணிக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும்; கேப்பாபுலவு மக்கள் திட்டவட்டம்

காணிக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.


கடந்த 31 ஆம் திகதி ஆரம்பித்த பிலவுக்குடியிருப்பு மக்களின் நல மீட்பு போராட்டம் இன்று பன்னிரண்டாவது நாளை எட்டியுள்ளது.

விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட மக்களின் காணிகளை விடுவிப்பதாக 30 ஆம் திகதி மக்களை குறித்த பகுதிக்கு வருமாறு கேப்பாபுலவு கிராமசேவகர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் அங்கு அரசாங்க அதிகாரிகள் யாரும் செல்லாத நிலையில் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதாக தெரிவித்த மக்கள், தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

புலவுக்குடியிருப்பு விமானப்படை முகாமிற்கு முன்னாள் கூடாரம் அமைத்து மக்கள் போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.