பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மக்கள் :எழுக தமிழ் நிகழ்வில் விக்னேஸ்வரன்
பெரும்பான்மை அரசியல் வாதிகள் தங்கள் கூறும் செயற்பாட்டினை நாங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றே கருதுகின்றார்கள்.
இவ்வாறு அவர்களின் விருப்பம் தொடருமானால் நாம் ஒருகாலத்தில் பயங்கரவாதிகள் என்று கூறி முத்திரை குத்தப்படும் சூழ்நிலைக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்படும். இப்போதும் அப்படிதான் சிலர் நோக்குகின்றனர்.
அரசாங்கத்தினை எதிர்ப்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றார்கள்.
மேலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் எமது இளைஞர்கள் யுவதிகள் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெறுகின்றதா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.








