Breaking News

இது ஆயுதப் போராட்டம் அல்ல! அஹிம்சைப் போராட்டம் : சித்தார்த்தன்



நாட்டில் இடம் பெறும் அனைத்து போராட்டங்களுக்கும் எழுச்சிக்கும் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்களே முன்னின்று செயற்படுகிறார்கள் என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எழுகத் தமிழ் பேரணியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசிய உணர்விலே மிகவும் அக்கறைக் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு திகழ்கின்றது.

நாட்டில் மிக முக்கிய போராட்டங்கள் கிழக்கில் இருந்தே வடக்கிற்கு பரவுகின்றது.

இது நாட்டில் இடம்பெறும் ஆயுதப் போராட்டம் இல்ல மக்கள் தமிழ் மொழிக்காக நடத்தும் போராட்டம்.

அன்று தந்தை சில்வா தலைமையில் எவ்வாறானதொரு சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெற்றதோ அதனைப் போலவே மிக முக்கிய போராட்டாக இது அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.