Breaking News

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றம்



செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை உடன் விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி, செட்டிக்குளம் பிரதேச ஒருங்கிணைப்புக்கு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராணுவத்தின் வசமுள்ள காணிகள் குறித்து இக்கூட்டத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இப் பிரதேசத்தில் அதிக பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பழத்தொழிற்சாலை ஒன்றை செயற்படுத்துவது மற்றும் பாடசாலைகளுக்கு மத்தியில் காணப்படும் மதுபானசாலைகளை அகற்றுவது குறித்தும் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மீள்குடியேறியவர்களுக்கான வீடமைப்பிற்கென வழங்கப்படும் எட்டு இலட்சம் ரூபா போதுமானதல்லவென பயனாளிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, அதனை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களுள் ஒருவரான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.