Breaking News

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!



கோப்பாபிலபு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். பேரூந்து நிலையத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் கேப்பாப்புலவு மக்களுக்காக பதாகைகளை தாங்கி தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

கடந்த 31ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டம் இன்று பன்னிரண்டு நாளாகவும் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் தமது காணிக்குள் கால் பதிக்கும் வரை தாம் போராட்டத்தைத் தொடரவுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.