குமாரபுரம் படுகொலையின் 21 ஆவது நினைவு தினம்
திருகோணமலை குமாரபுரம் கிளிவெட்டியில் 1996 ஆம் ஆண்டு இராணுவம் மற்றும் துணைப்படைகள் இணைந்து நடத்திய படுகொலை சம்பவத்தின் 21 ஆம் நினைவு நாள் இன்றாகும்.
மூதூர் கிளிவெட்டி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து நினைவு தினத்தை இன்றையதினம் அனுஷ்டிக்கின்றனர்.
குமாரபுரம் என்ற கிராமத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணைப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் 9 பெண்கள், 12 வயதிற்குக் 9 சிறுவர்கள், உட்பட 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 26 பேர் படுகாயமடைந்தனர்.
இப்படுகொலைகள் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் ஊர்காவல் படையினர் பலரைக் கைதுசெய்து, 2004 ஆம் ஆண்டில் விசாரணைகளை ஆரம்பித்தது மாத்திரமன்றி, 2016 யூலை மாதம் 27 இல் குற்றம்சாட்டப்பட்டிருந்த 6 இராணுவத்தினரையும் நீதிமன்றம் நிரபராதிகள் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








