Breaking News

வீதியில் மக்களிருக்க பாரியாருடன் சுமந்திரன் சுதந்திரநாளில் (காணொளி)

கடந்த மாதம் 31ஆம் நாளிலிருந்து தமது
காணியை மீட்க இரவு, பகலாகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமது போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனோ, சுமந்திரனோ கருத்திலெடுக்கவில்லையென அம்மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்நிலையில் கேப்பாப்புலவு மக்களைச் இதுவரை சென்று சந்திக்காத தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலை பத்திரகாணியம்மன் கோவில் கும்பாவிசேடத்திலும் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சுதந்திரநாள் நிகழ்வில் பாரியாருடன் கலந்துகொண்ட காணொளி வெளிவந்துள்ளது.



கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்மக்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக சுதந்திரதினத்தில் கலந்துகொண்டுவரும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இம்முறை மக்களின் கடுமையான போராட்டத்தின் காரணமாக சம்பந்தன் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருந்தார். இருந்தும் சுமந்திரன் வழமைபோல தனது பாரியாருடன் வழமையைவிட ஒரு ஓரமாக கமராவுக்கு சிக்காதவாறு இருந்துகொண்டதோடு அதனை எந்த தமிழ் ஊடகங்களிலும் செய்தியாக வராதவாறு பார்த்துக்கொண்டார்.

இருந்தும் அது காணொளி வடிவில் தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு கிடைத்துள்ளது. என்பதனை அறியத்தருவதோடு மக்களின் போராட்டங்களில் மக்களை சென்று சந்திக்காமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் போராட்ட காரர்கள் தன்னை அசிங்கப்படுத்தி தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டிருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்ததாகவும் அதனையடுத்தே தான் அம்மக்களைச் சென்று சந்திக்கவில்லையெனவும் தெரிவித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.








தொடர்புடைய முன்னைய செய்திகள்

இராணுவத்தை வைத்திருக்கவா சுமந்திரனின் நாடகம்?-விக்கி(காணொளி)

தன்மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளதால் கேப்பாபுலவு மக்களைச் சந்திக்கச் செல்லவில்லை – சுமந்திரன்

விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை



தொடர்புடைய முன்னைய காணொளி



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்