Breaking News

என்னைப்பற்றி தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம்

வழக்கமான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக கொழும்பில் தன்னுடைய வீட்டில் தங்கியிருப்பதாகவும், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடுமையான சுகயீனமடைந்துள்ளதாகவும் தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம். எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமது ஊடக இணைப்பாளர் ஊடாக குரல் பதிவு ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்கள் தொடர்பாக வைத்தியர்கள் தன்னை பரிசோதிக்க உள்ளதாகவும், அதனை தவிர பாரதூரமான நிலமைகள் எதவும் இல்லை எனவுமம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தான் கடுமையான சுகயீனமடைந்துள்ளதாகவும், இரு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அதில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், மிக விரைவில் தாம் பணிகளுக்கு திரும்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.