பிலவுக்குடியிருப்பு விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் சற்றுமுன்னர் திறந்துவிடப்பட்டுள்ளது.
எனினும் மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிக்கப்படும் வரை யாரையும் உட்பிரவேசிக்க வேண்டாம் என இராணுவத்தினர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது

ஏற்கனவே சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் புலவுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.