Breaking News

ஜனாதிபதியின் பெயரும் தேசத்துரோகிகள் பட்டியலில் சேரும்?



ஆங்கிலேயரினால் தேசத் துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டவர்களை, தேசத்துக்காக போராடிய வீரர்கள் என பிரகடனம் செய்த ஜனாதிபதி தேசத்துரோகியாக எதிர்காலத்தில் எழுதப்படக் கூடாது என மஹிந்த சார்பு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்த அரசாங்கம் அரச சொத்துக்களையெல்லாம் வெளிநாட்டவருக்கு பகுதி பகுதியாக விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை ஜனாதிபதி தடுக்காது விட்டால், எதிர்வரும் காலத்தில் அவரின் பெயர் தேசத்துரோகிகள் பட்டியலில் இடம்பிடிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.