சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலத்தை கொண்டு வர முயற்சி
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நபர்களை யுத்த குற்றவாளிகள் என தெரிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம்சுமத்தியுள்ளார்.
ஹம்பகா மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புலம்பெயர் அமைப்புகளினதும் சர்வதேச நாடுகளின் தேவைக்கு அமைய தம்மை தண்டிக்க முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பிலான காரியாலயம் உருவாக்கப்பட்டமையும் தமக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.