மோடிக்கான ஜனாதிபதியின் விருந்துபசாரத்தில் பங்கேற்கவுள்ள சி.வி.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் பண்டிகை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான ஜனாதிபதியின் விருந்துபசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று மாலை வந்தடையவுள்ள இந்திய பிரதமருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பலத்த வரவேற்பளிக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவுநேர விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விருந்துபசாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் மேற்படி விருந்துபசாரத்தில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.