Breaking News

மைத்திரியை எதிர்க்க யாருக்கும் அருகதை இல்லை?-சரவணபவன் கேள்வி

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கி வருகிறது.
கூடவே அது தொடர்பான சர்ச்சைகளும் கிளம்புகின்றன. அன்றைய தினத்தில் முல்லைத்தீவுக்கு மைத்திரி வருகை தருவதற்கு இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் எழுந்திருந்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உடனடியாக வருகையை கைவிடவேண்டும் என அறிக்கை விட்டார் அதற்கு பதிலளிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை கடுமையாக சாடியுள்ளதோடு அது தொடர்பாக ஜெனாதிபதியை எதிர்ப்பதற்கு இவர்களுக்கு அருகதையுண்டா எனவும் தனது பத்திரிகையின் ஆசிரிய பார்வையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கடுமையாக சாடியுள்ள சரவணபவன் மேலும் தெரிவிக்கையில் சாள்ஸ் நிர்மலநாதன் மட்டுமல்ல தமிழர் தரப்பில் யாருக்குமே மைத்திரியின் வருகையை எதிர்க்க அருகதை உண்டா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது பதிவில்

அன்றைய தினத்தில் அரச தலைவர் அந்த நிகழ்ச்சியை முல்லைத்தீவில் நடத்துவதைக் கைவிடவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியிருக்கிறார். இதனை ஏற்று நிகழ்ச்சித் திகதியை கொழும்பு ஒத்தி வைக்கிறதா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கஇ மே 18ஆம் திகதியை, – முள்ளி வாய்க்கால் நினைவு தினத்தைக் – குறித்துப் பேசுவதற்கு, அதையொட்டிக் கண்டனங்களை, விமர்சனங்களை முன்வைப்ப தற்குத் தமிழர் தரப்புக்கு உண்மையில் அருகதை இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்