Breaking News

மன்னார் அடம்பனில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு)(படங்கள்)


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடை பெற்று
இன்று வியாழக்கிழமையுடன் 8 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த கொடிய யுத்தத்தில் உயிர் நீத்த தமிழ் உறவுகளை நினைவு கூரும் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் அடம்பன் பகுதியில் நினைவு கூரப்பட்டது.

இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பொதுச் சுடரை முள்ளிவாய்க்காலில் தனது குடும்ப உறவுகள் 5 பேரை பறி கொடுத்த மேரி என்ன தாய் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து வருகை தந்த பிரமுகர்கள் மாலை அணிவத்து,மலர் தூவி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமாத்தலைவர்கள், வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் முன்னால் பிரதிநிதிகள், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க்,மூத்த பத்திரிக்கையாளர் மக்கள் காதர்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகள்,யுத்தத்தின் போது தமது உறவுகளை இழந்த உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்