Breaking News

தென்னாபிரிக்காவை வெற்றி கொள்ளுமா இலங்கை அணி?



சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று சனிக்கிழமை நடைபெறும் போட்டியல் இலங்கை அணியும், தென்ஆப்பிரிக்க அணியும் மோதவுள்ளன. 

இன்றைய போட்டியில் இலங்கை அணித் தலைவர் மெத்திவ்ஸ் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் உபுல் தரங்க அணிக்கு தலைமை தாங்கவுள்ளார். 

தென்ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸ் தலைமையில் களம் இறங்குகிறது. ஏற்கனவே நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்திடம் முறையே 318 ஓட்டங்கள், 356 ஓட்டங்கள் எடுத்தும் இலங்கை அணிக்கு தோல்வியே மிஞ்சியது. 

இந்நிலையில் களமிறங்கும் இலங்கையை வெற்றி வாய்ப்புள்ள அணியாக யாரும் பார்க்கவில்லை. இதுவே தங்களுக்கு முழு உத்வேகத்துடன் நெருக்கடியின்றி விளையாட உதவும் என்று இலங்கை வீரர்கள் நம்புகிறார்கள்.