Breaking News

அனர்த்த பாதிப்பிற்கு தொடர்ந்து உதவுவதாக செல்வம் எம்.பி. தெரிவிப்பு

தென்னிலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


இயற்கை அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட காலி  – பத்தேகம பகுதிக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினருடன், வடக்கைச் சேர்ந்த மாணவக் குழுவினர், அறக்கட்டளை நிறுவனமொன்றை சேர்ந்தவர்கள் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என சுமார் 85 பேர் அப்பகுதிக்குச் சென்று நிவாரண உதவிகளை வழங்கியதோடு, சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமது குறைகளை குறிப்பிட்ட மக்கள், வெள்ளத்தால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள போதும் இரு வீடுகளுக்கு மாத்திரமே கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளளதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உறுதியளித்துள்ளார்.