சீரற்றகாலநிலை இதுவரை 211 பேரின் உயிர்களை காவு கொண்டுள்ளதாக தகவல்
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 211 பேர் உயிரிழந்துள்ளதுடன், 72 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் 86 பேரும், கேகாலையில் நான்கு பேரும், மாத்தறையில் 31 பேரும், ஹம்மாந்தோட்டையில் ஐவரும், காலியில் 15 பேரும், களுத்துறையில் 65 பேரும், கம்பஹாவில் நால்வரும் இதுவரையில் மரணித்துள்ளனர்.
அதேபோல் இதுவரையில் 91 பேர் காணாமல் போயுள்ளதாகவும், மொத்தமாக ஒரு இலட்சத்து எண்பத்தையாயிரத்து 805 குடும்பங்களை சேர்ந்து எழு இலட்சத்து நான்காயிரத்து 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரையில் ஆயிரத்து 999 வீடுகள் முழுமையாகவும், பத்தாயிரத்து 867 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.