Breaking News

அரசில் இணைந்திருப்பதா என்று மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு – டிலான் பெரேரா



கூட்டு அரசாங்கத்தில் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளாமல் விட்டிருந்தால், அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்திருக்காது.

கூட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்காவிட்டால், 2001-2004 காலப்பகுதியில் சந்திரிகா குமாரதுங்கவைப் போல, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்.

ஐதேகவின் பல தன்னிச்சையான முடிவுகளை, அரசாங்கத்தில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முறியடித்துள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.