Breaking News

வெளியேறும் முடிவை டிசெம்பர் 31 வரை நிறுத்தி வையுங்கள் – ஜனாதிபதி கோரிக்கை



அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவை டிசெம்பர் 31 ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம், அதன் தலைவரும், சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், வரும் செப்ரெம்பர் மாதத்துடன், பதவிகளை விட்டு விலகி, தனியான அணியாகச் செயற்படுவது அல்லது எதிரணியுடன் இணைந்து கொள்வதென முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பங்களாதேசுக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, அவர்களைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போதே, அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவை வரும் டிசெம்பர் 31ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு வரும் டிசெம்பர் மாதத்துடன் காலாவதியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.