Breaking News

புத்தகங்களை துருவி ஆராய்ந்து விடயங்களைத் தேடும் பழக்கம் எம்மவரிடையே அற்று விட்டது – வடமாகாண முதலமைச்சர்!

இலத்திரனியல் தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக மக்கள் தமக்குத் தேவை யானவற்றை இணையத் தளங்கள் மூலம் இலகுவாகப் பெற்றுக்கொ ண்டாலும், புத்தகங்களை துருவி ஆராய்ந்து விடயங்களைத் தேடும் பழக்கம் மக்களிடையே அற்றுப்போ ய்விட்டதாக வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பணிமனையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

 வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனை பூரணத்துவம் அடையச் செய்கின்றது. சில காலங்களுக்கு முன்னர் படித்தவர்கள் வசிக்கின்ற பலர் வீடுகளில் ஒரு சிறிய நூலகமொன்றில் புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். 

 அவ்வாறு ஒரு தொகைப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களும் அருகில் உள்ள நூல் நிலையங்களுக்குச் சென்று சனி, ஞாயிறுகளில் பெரும் பகுதியான நேரங்களை வாசிப்பில் செலவு செய்வார்கள். 

இலத்திரனியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் புத்தக ங்களைத் தேடிப் போய் வாசிப்புப் பழக்கங்களில் ஈடுபடுகின்ற நிலையை மாற்றிக்கொண்டு தமக்குத் தேவையான தரவுகளை இணையத்தளங்களின் ஊடாக இலகுவில் சேகரித்து விடுகின்றார்கள். 

இதனால் கூடுதலான நேரம் மீதப்படுத்தப்படுகின்றது. தேவையான தரவை நேரடியாகச் சென்று பெறக்கூடிய வழிமுறைகள் காணப்படுகின்றன. அதனால் புத்தகங்களை துருவி ஆராய்ந்து விடயங்களைத் தேடுகின்ற பழக்கம் ஓரளவு கைவிடப்பட்டு விட்டது என்றே குறிப்பிட வேண்டும். 

ஒரு தடவை மகாத்மா காந்தி அவர்களுக்கு ஒரு சிறிய சத்திர சிகிச்சை அவரின் வயிற்றில் மேற்கொள்ள வேண்டி இருந்ததாம். அவருக்கு சத்திர சிகிச்சையை அளிக்க இருந்த வைத்திய நிபுணர்கள் அவருக்கு மயக்க மருந்து கொடுப்பதற்காக அவரின் சம்மதத்தை கேட்டார்களாம். 

 அதற்கு மகாத்மா காந்தி ஒத்துக் கொள்ளவில்லை எனவும், தான் பகவத் கீதை புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கி ஐந்து நிமிடங்களின் பின்னர் சத்திர சிகிச்சையை ஆரம்பிக்குமாறும் கூறினாராம். 

அது போலவே ஐந்து நிமிடம் கழித்து சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த பின்னர் சத்திர சிகிச்சை முடிந்து விட்டது என்று அவருக்கு கூறி னார்களாம். அப்போது தான் அப்படியா? முடிந்து விட்டதா? என்று வியப்புடன் வினாவினாராம். 

அந்த அளவுக்கு வாசிப்பின் மீது காதல் கொண்டவராக விளங்கினார். சுவாமி விவேகானந்தர் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே அவற்றில் இருப்பவற்றை இலகுவில் புரிந்து கொள்வாராம். மாவீரன் அலெக்சாண்டர் கூட வாசிப்புப் பழக்கத்தில் மிகவும் வல்லவராம். 

அவரது அரண்மனையில் சுமார் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் புத்தகங்களை வைத்திருந்தாராம். போருக்குச் செல்லும் போது கூட நூற்றுக்கணக்கான புத்தகங்களை எடுத்துச் செல்வதுடன் அவற்றை ஒழுங்குபடுத்தி கொடுப்பதற்காக ஒரு நூலகரையும் அழைத்துச் செல்வாராம். 

அதே போன்று இந்தியாவின் விடுதலைப் போராளியாகத் தூக்கிலிடப்பட்ட பகவத்சிங் தூக்குத் தண்டனை தீர்க்கப்பட்டு மறுநாள் தூக்கு மேடையில் தூக்கில் ஏற்றுவதற்கு தயாரான நிலையிலும் அவர் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாராம். 

அருகில் இருந்த ராஜகுரு அவரைப் பார்த்து நாளைக்கு தூக்கில் தொங்கப் போகின்ற நீ இன்றும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது என்று கூறினாராம். 

அதற்கு பகவத்சிங் கோபம் கொண்டு என்னை இறக்கும் போது முட்டாளாக இறக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாயா என கடிந்து கொண்டாராம். அந்த அளவுக்கு வாசிப்பில் ஆர்வம் கொண்ட பலரின் கதைகளை வாசித்தும் கேட்டும் அறிந்து கொண்டிருக்கின்றோம். 

முன்பெல்லாம் வேலை நேரம் தவிர்ந்த ஏனைய எல்லா நேரங்களிலும் புத்தகத்துடனேயே மக்கள் பொழுதைக் கழித்தனர். அது காவியமாக இருக்க லாம், சமூக, நாவல், அறிவியல் புத்தகங்கள், விகடத் துணுக்குகள் என எந்த வகையாகவும் இருக்கலாம். 

ஆனால் ஊடகங்களின் ஆதிக்கம் எம்மீது வலுவான தாக்கங்களை ஏற்படுத்திய பின்னர் எமது இளைஞர் யுவதிகள் தெருக்களிலும் வீதிகளிலும் நடந்து செல்லுகின்ற போதும் வண்டிகளில் செல்கின்ற போதும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் போல தனியாக கதைத்துக் கொண்டு அல்லது சிரித்துப் பேசிக் கொண்டு செல்வதைக் காணலாம். 

அதனால் எம்மை அறியாமலே அவர்கள் மீது ஒரு பரிதாப உணர்வு ஏற்படு கின்றது. ஆனால் கூர்ந்து அவதானிக்கும் போதே அவர்களுடைய செவிகளில் சிறிய அளவிலான கைத்தொலைபேசி செருகப்பட்டிருப்பது தெரியவரு கின்றது. 

 நல்ல நல்ல புத்தகங்களில் முடியுமானவற்றை வாங்கிச் சென்று படியுங்கள். வாசிப்பு உங்களை முழுமை பெறச் செய்வதுடன் பரந்த அறிவை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.