ரவிகரனிடம் விளக்கம் கோரினார் முதலமைச்சர்!
வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படவேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டு வருகின்ற நிலையிலுமே, முதலமைச்சர் மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். ரவிகரனுக்கு எதிராக அந்த மாவட்டத்திலுள்ள சில அமைப்புக்களால் முதலமைச்சரிடம் மனுக் கொடுக்கப்பட்டிருந்தது. நிதி கையாடல்களில் ஈடுபட்டார் என்று அவற்றில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு – தன்னிலை விளக்கத்தை வழங்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சில தினங்களுக்கு முன்னர் ரவிகரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







