Breaking News

பெற்றோரை இழந்த எமக்கு உதவுங்கள்: செஞ்சோலை சிறார்கள்

யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் பறிகொடுத்துவிட்டு வாழும் தமக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு உதவுமாறு செஞ்சோலை சிறுவர் இல்ல சிறார்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். வடக்கு மாகாண சபையின் இன்றைய (வியாழக்கிழமை) 101 ஆவது அமர்வினை பார்வையிடச் சென்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்தினர், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

அத்தோடு, சிறுவர் இல்லத்திற்கான தளபாடங்கள், குடிநீர் வசதி போன்ற விடயங்களிலும் வடக்கு மாகாண சபை உதவ வேண்டுமென கேட்டுக்கொ ண்டதோடு, புலம்பெயர் சமூகமும் தமது விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, சிறார்களின் தேவைகள் தொடர்பாக தமக்கு எழுத்து மூலம் அறியத்தருமாறு முதலமைச்சர் குறிப்பி ட்டுள்ளார். இச் சந்திப்பில், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டி ருந்தனர். சந்திப்பின் நிறைவாக முதமைச்சரிடம் ஆசி பெற்ற செஞ்சோலை சிறுவர்கள்.