ஜநா மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்துள்ளார்
ஜெனிவாலிருந்து வருகைதந்துள்ள ஜநா மனித உரிமைகள் ஆணை யத்தின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கை யுஎன்எச்சி ஆர் பிரதிநிதி ஆகியோர் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து கலந்துரை யாடியுள்ளனா். இன்று வியாழக்கி ழமை பிற்பகல் 179 நாளாக கிளி நொச்சி கந்தசுவாமி ஆலய முன்ற லில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட வா்களின் உறவினா்களை சந்தித்த இவா்கள் அவா்களுடன் கலந்துரையாடி யுள்ளனா்.
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உற வினா்களின் நிலைமைகளை கேட்ட றிந்து கொண்டதோடு, கவனம் செலு த்துவதாகவும் தெரிவித்துள்ளனா்.
அதேவேளை சந்திப்பின் பின் ஊடக ங்களுக்கு கருத்து தெரிவிக்க அவர்கள் மறுத்து விட்டனா்.










