Breaking News

அரசின் நோக்கம் நாட்டில் வெளிநாடுகளின் முதலீட்டை அதிகரிப்பதே-ஜனாதிபதி தெரிவிப்பு


அரசின் நோக்கமானது நாட்டின்  இறையாண்மையை பாதிக்காதபடி நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதே. 

அத்துடன் ஒரு நாட்டின் முதலீட்டின் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் பொழுது நாட்டின் நிலப்பகுதிக்கு எந்த வொரு உரிமையும் வழங்கப்படாது. முதலீடு என்பது வெறும் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாத்திரமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60ஆவது ஆண்டு நிறைவு நேற்று (ஓகஸ்ட்9) பி.எம்.ஐ.சி இல் நடைபெற்றது. விழாவின் பேசிய பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

மேலும் கடந்த இரண்டரை வருடங்களில் நாட்டில் இருந்த கடன்களை குறைக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பயனுள்ள விளைவுகளை தருவதை அவதானிக்க முடுடிகின்றதென்றும் கடந்த இருபது ஆண்டுகளில் சீனா இலங்கைக்கான உறவுகள் உறுதியானதாக இருப்பதையிட்டு மகிழ்ச்சிய டைவதாகவும் குறித்த உறவை மேலும் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.