Breaking News

பிள்ளைகளை சரியாக வளர்ப்பதற்காக கட்டுப்படுத்துவது சரியா?

ஒழுக்கம் மிகவும் அவசியமானது தான். அதற்காக எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு விதிப்பது கூடாது. மனித னுக்கு கற்றல் என்பது அவன் கரு வறையில் தொடங்கி மரணம் வரை யில் நீடிக்கிறது. 

நாமும் இன்றும் பல விஷயங்களை புதிதாக அனுபவித்து அறிகிறோம். அது போலவே நமது குழந்தைகளும், தங்கள் அறிவுணர்ச்சியால் மெல்ல மெல்ல தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வார்கள். 

தங்கள் குழந்தையின் திறமையை எப்படி மேம்படுத்தலாம் என்ற கவலை அனைவருக்குமே இருக்கும். அதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. 

பொதுவாக புத்தகப் படிப்பு மட்டுமே எல்லாவற்றையும் வளர்க்கும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். புத்தக படிப்பைத் தாண்டிய அனுபவங்க ளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். குழந்தைகளின் படிக்கும் திறனை ஊக்குவிக்க கவலையின்றி படிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். 

மனப்பாடம் செய்ய வேண்டும் கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்பது போன்ற நெருக்கடியில்லாமல் விளையாட்டும் செயலுமாக கற்றால் அவர்கள் விருப்பத்துடன் படிப்பார்கள். 


மனதில் ஏற்றிக் கொள்வார்கள். குழந்தைகளுக்குத் தற்போது சேர்ந்து விளையாடவோ பொழுதைக் கழிக்கவோ சாவகாசமாகத் தங்கள் இயல்புக்கு ஏற்ப கற்பதற்கோ போதிய நேரமில்லை. ஆனால் குழந்தைகளைப் பொருத்த வரை அவகாசம் அவசியமானது. 

அதிகரித்துவரும் பாடச்சுமையும்இ பயிற்சிகளும் அவர்களது இளைப்பாறும் இடைவேளைகளை திருடிக் கொள்கின்றன. குழந்தைகளின் அடிப்படைத் தேவையான விளையாட்டை பெற்றோரும்,பள்ளிகளும் பறிக்கக் கூடாது. 

விதவிதமான பயிற்சிகள் மட்டும் அவர்களை மேதைகளாக்கி விடாது. விளையாட்டைப் போல அவர்களின் திறன்களில் மாறுதலை ஏற்படுத்துவது எதுவுமில்லை. 

அதனால்தான் சமீப காலமாக செயல்வழி கற்றல் சிறந்தது என பேசப்பட்டு வருகிறது. மதிப்பெண்கள் பெறவும்,உயர் பதவிக்கு செல்லும் நோக்கத்துடனும் குழந்தைகளை முடுக்கிவிடக் கூடாது. 

அப்படி எந்திரத்தனமாக நடத்தப்படும் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தங்கள் அடிப்படை திறனில் இருந்து எளிதில் விலகுவார்களே தவிர அதிகமாக சாதிப்பதில்லை. 

அறிவின் உண்மையான ஆழத்தைத் தேடி படிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் அதிகமாக சாதிப்பார்கள். உடலியல் ரீதியில் ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைவுகூரும்போது புத்திக்கூர்மைத் திறன் அதிகமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதுவும் அழுத்தமற்ற சூழலில் ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து செய்யும்போது அது நல்ல முறையில் நினைவில் தங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே சுதந்திரமான சூழலில் ஆர்வத்துடன் கூடிய கற்றலே குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது.