Breaking News

தமிழில் பேசமுடியாததையிட்டு வெட்கப்படுகின்றேன் – மங்களசமரவீர!

நானும் ஓரு சிறிலங்காப் பிரஜை என்ற வகையில் தமிழ் மொழியில் பேச முடியாததையிட்டு மிகவும் வெட்கப்படுகின்றேன் என சிறிலங்கா நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் நிகழ்வொன்றில் உரை யாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரை யாற்றுகையில், இதனை பாரிய குறைபாடாகவே  கருதுகின்றேன். 

சிறிலங்காவின் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளாவது நாட்டின் பிரதான மொழிகளான சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற மும்மொழிகளைக் கதைக்கக்கூடியவர்களாக உருவாகவேண்டும். 

அவ்வாறு அமையும் பட்சத்திலேயே அனைத்து இன மக்களின் தனித்துவங்க ளையும் மதிக்கும் பக்குவமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். 

அத்துடன், நான் நண்பர் றெஜினோல்ட் கூரே ஆற்றிய உரையை கேட்டுக்கொ ண்டிருந்தபோது என்னைப் பற்றியே நான் தாழ்வாக எண்ணியதுடன், வெட்கப்பட்டுக்கொண்டே இருந்தேன் எனத் தெரிவித்தார்.