Breaking News

விஜேதாசவிற்கு எதிராக களமிறங்கும் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச வுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரை 70 நாடாளு மன்ற உறுப்பினர்கள் கையெழுத்தி ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன. ஹம்பாந்தோட்டை துறை முகம் தொடர்பான முடிவை விமர்சி த்து அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியமை, இவரது அமைச்சின் கீழ் உள்ள சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுக்கும் முன்னைய அரசாங்கத்திற்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளை இழுத்த டிக்கின்றமை, ரவி கருணாநாயக்க விடயத்தில், சட்ட மா அதிபர் திணைக்க ளத்தின் மூத்த சட்டவாளர் நடந்து கொண்ட முறைமை போன்ற விடயங்கள் தொடர்பாக விஜேதாச ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

இந்த காரணங்களை அடிப்படையாக வைத்து அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

 நீதி அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்ச விலக வேண்டும் அல்லது ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக வெளியிட்ட சர்ச்சை க்குரிய கருத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். 

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தகவ ல்கள் வெளியாகியிருந்தன. 

இது தொடர்பில் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வுடன் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், விஜேதாச ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வ தற்கு, மூன்று பௌத்த பீடங்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.  

இவ்வாறான சூழலில் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கை யில்லா பிரேரணையை ஆதரிக்க ப்போவது இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், கூட்டு எதிர்க்கட்சியும் இணைவது குறிப்பிடத்தக்கது