Breaking News

தியாக தீபம் திலீபனின் நினைவிட சிரமதானம்!

மண்ணின் விடிவிற்காக தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் மெழுகாய் தன்னுயிரை உருக்கி ஈகம் செய்த தியாகி லெப் கேணல் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நல்லூர் தெற்கு வீதியில் அவரது நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் இன்று காலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான அணியினரால் நினைவிடம் துப்பரவு செய்யப்பட்டது.