Breaking News

ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்திவைப்பு; காரணம் இதுதான்

ஐக்கிய தேசிய முன்னணியின் தலை வர்களுடன் நேற்று மாலை நடைபெற விருந்த சந்திப்பை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்போட்டுள்ளார். முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலை வர்களுடன், நேற்றைய தினம் ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்த வுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த சந்திப்பு அடுத்த வாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. முக்கியமான பிரச்சினைகள், தற்போதைய அரசியல் விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும், இந்தக் கூட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 31ஆம் திகதி தனித்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பில் பிரதமர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தார். 

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, தொடர்ச்சியாக சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாயின் தமது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியா கியுள்ளன. 

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுவதா? அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பொதுவான ஒரு சின்னத்தில் போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காகவே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக கூட்டணியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார். 

தமிழ் முற்போக்குக் கூட்டணி வெற்றிபெறக்கூடிய தொகுதிகளில் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்பது தொடர்பிலேயே  அவதானம் செலுத்தவுள்ள தாகவும்  சுட்டிக்காட்டினார்.