வடமாகாண சுகாதார அமைச்சரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டார் சி.வி.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் பதவி வில கலை ஏற்றுக் கொண்டு முதலமை ச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தி யோக பூர்வமாக எழுத்தில் பதில் அனுப்பி வைத்துள்ளார்.
‘வடக்கு மாகாண சுகாதார அமைச்ச ரான தங்களது 6.8.2017ம் திகதிய பதவி விலகல் கடிதம் சார்பாக குறித்த அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலும் கடந்த சில தினங்களாக நீங்கள் பணிக்குச் செல்லாததன் நிமித்தமும் தங்களது பதவி விலகல் முடிவு ஏற்று க்கொள்ளப்படுகின்றது’ என முதலமைச்சரால் நேற்றைய தினம் பதில் வழங்க ப்பட்டுள்ளது.
அடுத்த சுகாதார அமைச்சர் தொடர்பில் இதுவரை முடிவில்லாத நிலையில் சுகாதார அமைச்சு பொறுப்பையும் முதலமைச்சர் நேற்றைய தினத்தில் இருந்து தானே எடுத்துக்கொண்டு உள்ளார்.