Breaking News

மத்திய வங்கி பிணை முறியுடன் ரவி மட்டும் தொடர்புபடவில்லை – மஹிந்த ராஜபக்ஸ

மத்திய வங்கி பிணை முறி மோசடி யுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மட்டும் தொடர்புபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவி யிலிருந்து விலகியமை வெறும் கண்துடைப்பு நாடகம் என குற்றம் சுமத்தி யுள்ள அவர் மக்கள் நீதிமன்றிற்கு பதில் சொல்லாமல் எவராலும் தப்பிக்க முடியாது எனக்   குறிப்பிட்டுள்ளார். 

தற்போது நாட்டில் நடக்கும் விடயங்களை மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ள மகிந்த  தீர்மானம் எடுத்துள்ளதாக வும் அதன் படி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.