Breaking News

ஐ.தே.மு. தலைவர்கள் இன்று ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

ஐக்கிய தேசிய முன்னணியின் தலை வர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துப் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரத மர் ரணில் விக்ரமசிங்க தலைமை யில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற, ஐக்கிய தேசிய முன்ன ணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடனான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பில் மாகாணசபைத் தேர்தல், மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பிலும், இரு தேர்தல்கள் குறித்த சட்ட மூலகங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவுகள் எடுக்கப்படுமென  தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன், புதிய அரசியலமைப்புக் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இறுதி நிலைப்பாட்டினை ஜனாதிபதி தெரிவிக்கவேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் இக்கூட்டத்தில் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.